தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் சூரிய மின் திட்டங்களுக்கு 187 மெகாவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை வழங்குவதற்கான ஆர்டரை விக்ரம் சோலார் நிறுவனம் பெற்றுள்ளது.
இரு மாநிலங்களிலும் மூன்று இடங்களில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு, 615 முதல் 625 வாட் திறன் கொண்ட அதிநவீன சோலார் பேனல்கள் வழங்கப்பட உள்ளன.
ஏற்கெனவே வணிகத் தொடர்பில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்திடமிருந்து இந்த ஆர்டர் பெறப்பட்டுள்ளது.சூரிய மின்சக்தித் துறையில் செயல்திறன் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை கொண்ட தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சமீர் நாக்பால் தெரிவித்தார்.